ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஆனால் இந்திய அணி ஒரு இடம் கீழிறங்கி 3வது இடத்தில் உள்ளது.இலங்கையிடம் இந்தியா 2வது இடத்தை இழந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இலங்கை, இங்கிலாந்து அணியை 3-2 என்று ஒருநாள் தொடரில் வென்றதால் அதன் தரவரிசைப்புள்ளிகள் அதிகரித்தது. இந்திய கேப்டன் தோனி 6வது இடத்தைத் தக்கவைத்துள்ளார். ஷிகர் தவான் ஒரு இடம் கீழிறங்கி 8வது இடத்திற்குச் சென்றுள்ளார்.

ரோகித் சர்மா முதல் 20 இடங்களில் நுழைந்துள்ளார். அவர் தற்போது 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து விச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 வீரர்கள் பட்டியலில் ஜடேஜா மட்டுமே உள்ளார். அவரும் ஒரு இடம் இறங்கி 5வது இடத்திற்குச் சென்றுள்ளார்.

இலங்கையின் திலகரத்னே தில்ஷன் 2 இடங்கள் முன்னேறி 7வது இடத்திற்கு வந்துள்ளார். இங்கிலாந்தை இலங்கை வீழ்த்திய சமீபத்திய ஒருநாள் தொடரில் தில்ஷன் 222 ரன்களை 44.40 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.பி.டிவிலியர்ஸ் பேட்டிங் தரவரிசையில் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி 3வது இடத்திலும் உள்ளனர்