திமுகவின் அடுத்த லிஸ்டில்.. பொன்முடி, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், முத்துசாமி?

திமுகவினர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை பாய இருப்பதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து அக்கட்சியை சீரமைக்கும் நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 முதல் கட்டமாக 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அவர்களில் பழனி மாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம், இன்பசேகரன், பாரப்பட்டி சுரேஷ் ஆகியோர் அடங்குவர். இதைத் தொடர்ந்து மேலும் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, லாரன்ஸ் மற்றும் தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.