ஜனாதிபதி உரை - முக்கிய அம்சங்கள்

16-வது மக்களவையின் முதல் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று 55 நிமிடங்கள் உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள்:


* தடம்புரண்ட பொருளாதாரத்தை மீண்டும் அதன் தடத்தில் நிறுத்துவதற்கு முன்னுரிமை. பொருளாதாரத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு வருவது, பணவீக்கத்தை குறைத்தல், முதலீட்டை அதிகரித்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல். இவற்றின் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் நம்பிக்கையைப் பெறுதல்.

* மாநிலங்களுடன் விவாதித்து பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்படும்.

* அண்டை நாடுகளுடன் அமைதியான, ஸ்திரமான, பொருளாதார ரீதியிலான நட்புறவை கடைபிடிப்போம். அதே நேரத்தில் தேவையான பிரச்சினைகளில் நமது நிலையை அவர்களுக்கு தெளிவுபடுத்தவோம். வளர்ச்சியைப் பெற நாடுகளிடையே நம்பிக்கை இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க, அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.

* ஏழைகளின் நலனுக்காக இந்த அரசு செயல்படும். வறுமையை குறைப்பது நோக்கமல்ல. வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதுதான் எங்கள் நோக்கம்.

மாநிலங்களுடன் உறவு 

* உணவு பற்றாக்குறையை குறைக்க முன்னுரிமை அளிக்கப்படும். உணவுப் பொருள்களை பதுக்குவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருள்கள் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலங்களின் சிறந்த திட்டங்களையும் இணைத்து பொது விநியோக திட்டம் சீரமைக்கப்படும்.
* மாந¤லங்களுக்கு சுயாட்சி அதிகாரம் அளிப்பதுதான் இந்தியாவின் கொள்கை. ஆனால் காலபோக்கில் அது நீர்த்து போயுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றிட வேண்டும். அதற்காக தேசிய வளர்ச்சி கவுன்சில், மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வரப்படும். ஒத்துழைப்பு தத்துவத்தோடு, மாநிலங்களின் வளர்ச்சிக்கான செயல் அமைப்பாக மத்திய அரசு செயல்படும்.
*அனைத்து மாநிலங்களுக்கும், அதற்கேற்ற வகையில் மேம்பாட்டு திட்டங்கள் தனித்தனியாக வகுக்கப்படும்.
*ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கருப்புப் பணம்

* கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்படும். பல்வேறு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாடுகளின் ஒத்துழைப்பு கோரப்படும்.
* ஊழலை ஒழிக்க லோக்பால் கொண்டு வரப்படும். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சுதந்திரமாக செயல்படலாம். புதிய திட்டங்களுக்கான யோசனைகளை அவர்கள் தெரிவிக்கலாம்.
* ஊழலில்லாத, மக்களுக்கு விரைவாக பலன்தரக்கூடியதாக அரசு அதிகாரிகள் செயல்பாடுகள் இருக்கும். தேவையில்லாத, நடைமுறைக்கு ஓவ்வாத சட்டங்கள், நடைமுறைகள் நீக்கப்படும். அனைத்து அரசு கோப்புகளும் டிஜிட்டல்மயமாக்கப்படும்.

வரி சீரமைப்பு

* தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வரி வித¤ப்பு முறைகள் வெளிப்படையாக, நேர்மையாக இருக்கும¢ வகையில் திருத்தியமைக்கப்படும்.
* பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்படும். மாநிலங்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இது இருக்கும்.

மத வன்முறைக்கு எதிராக நடவடிக்கை

* மத வன்முறையை முற்றிலுமாக பொறுத்துக் கொள்ள முடியாது. மாநிலங்களுடன் இணைந்து மத வன்முறையை ஒடுக்க தேசிய செயல்திட்டம் தீட்டப்படும்
* உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் முழு அக்கறை எடுக்கப்படும்.
* தீவிரவாதம், நார்கோ-தீவிரவாதம், சைபர் குற்றங்களை சமாளிக்கத் தேவையான அனைத்து கருவிகளும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.
* பாதுகாப்புப் படையினரின் பணியை மேம்படுத்த அனைத்து தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும்.
* பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்கள் நலன்

* விளையாட்டுத் திறமையை மேம்படுத்த, ஊக்குவிக்க, குறிப்பாக ஊரகப் பகுதிகளில், தேசிய விளையாட்டு திறன் தேடல் அமைப்பு உருவாக்கப்படும்.
* தேசிய கல்விக் கொள்கையும் உருவாக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஐஐடி, ஐஐஎம் அமைக்கப்படும்.
* விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், பாட திட்டத்தில் விளையாட்டும் சேர்க்கப்படும்.

வேளாண்மை மேம்பாடு

* ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும்.
* நகர்ப்புறம், ஊரகப் பகுதி என்று தனித்தனியாகப் பிரிக்காமல¢, அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேளாண்மைதான் இந்தியாவின் முக்கிய தொழிலாகும். ஆனால் விவசாயிகள் தற்போது சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் வேளாண் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
* நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்.மருத்துவ சேவைகள்

* வெளிநாடுகளில் உள்ளதுபோன்ற, மருத்துவ சேவையை அனைவருக்கும் கிடைக்க புதிய மருத்துவக் கொள்கை வகுக்கப்படும். அந்த இலக்கை அடையும் வகையில் தேசிய மருத்துவ உறுதி மிஷன் உருவாக்கப்படும்.
* டெல்லியில் உள்ளதுபோன்ற எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும்.
* யோகா மற்றும் ஆயுஷ் ஊக்கப்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை உறுதிசெய்ய “ஸ்வாச் பாரத மிஷன்“ (சுகாதார பாரத திட்டம்) அறிமுகப்படுத்தப்படும். வரும் 2019-ல¢ மகாத்மா காந்தியின¢ 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.