அஜித்துடன் மலேசியா பறக்கும் அனுஷ்கா!

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இப்படத்திற்கு ஆயிரம் தோட்டாக்கள், சத்யா ஆகிய தலைப்புகள் பரிசீலினையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்தது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவிலேயே மலேசியா பறக்க இருக்கிறது. இங்கு தொடர்ந்து பத்து நாட்கள் முகாமிட்டு அஜித் மற்றும் அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

அதோடு சில முக்கியமான ஆக்ஷன் காட்சிகளையும் படமாக்கப் போகிறார்களாம். அஜித் - கௌதம் மேனன் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.