திரை விமர்சனம்: உன் சமையலறையில்

சமையலில் இருக்கும் பேரார் வத்தால் உருவாகும் காதல், வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பயணித்து எப்படி இணைகிறது என்பது தான் உன் சமையல் அறையில். மலை யாளத்தில் ஆஷிக் அபு இயக்கத்தில் 2011-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக் கான இந்தப் படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கியிருக்கிறார்.

தொல்பொருள் ஆய்வாளரான காளி தாசன் (பிரகாஷ்ராஜ்) நடுத்தர வய தைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தூரத்து உறவுக்காரரான வைத்தியுடன் (இளங்கோ குமரவேல்) வசித்துவரும் காளிதாசன், பயங்கரமான சாப்பாட்டுப் பிரியர். எந்த அளவிற்கு என்றால் திரு மணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்ற வீட்டின் சமையல்காரர் கிருஷ்ணா (தம்பி ராமைய்யா) சுவையாக சமைக் கிறார் என்பதற்காகத் தன் வீட்டிற்கு அழைத்து வரும் அளவிற்கு உணவு மீது காதல்.

ஒரு தவறான தொலைபேசி அழைப் பால் காளிதாசிற்கு டப்பிங் கலைஞரான கௌரி (ஸ்நேகா) அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் படுமோசமாகச் சண்டை யிட்டுக்கொள்பவர்கள், உணவு மீது இருக்கும் அதீத ஆர்வத்தால் பேசத் தொடங்குகிறார்கள். தொலைபேசியில் மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள், ஒரு கட்டத்தில் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால், திருமண வயது என்று கருதப்படும் வயதைக் கடந்துவிட்ட இருவருக்குமே தங்கள் தோற்றத்தினால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதனால் காளிதாசன் தன் அக்கா மகன் நவீனையும் (தேஜஸ்), கௌரி தன் அறைத் தோழி மேக்னாவையும் (சம்யுக்தா) முதல் சந்திப்பிற்கு அனுப்புகிறார்கள். இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

குழப்பம் தீர்ந்து காதலர்கள் இணைந் தார்களா, நவீனும் மேக்னாவும் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முகம் சுளிக்காமல் அனைவரும் பார்க் கும்படியான படங்களை மட்டுமே கொடுப்பேன் என்பதை மீண்டும் ஒரு முறை காட்டியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். உணவு சார்ந்த ரசனையை மையமாக வைத்து மென்மையான ஒரு காதல் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் படத்தின் முதல்பாதி திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைகிறது. திரைக்கதைக்குத் தொடர்பு இல்லாத பழங்குடிகளின் பிரச்சினை யைக் கையில் எடுத்திருப்பது, ஊர்வசி, ஐஸ்வர்யா என முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஏகப்பட்ட கதாபாத்தி ரங்கள் என பிரகாஷ்ராஜ் தன் சமையலைச் சொதப்பியிருக்கிறார்.

நவீன்-மேக்னா காதல் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைந்ததில் இவர்கள் இருவரின் நடிப்பிற்கும் பெரும் பங்கிருக்கிறது. இரண்டாம் பாதி யில் வரும் இரண்டு பாடல்கள் தேவையில்லாத வேகத் தடைகள்.

இந்தப் படத்தில் உணவு ஒரு முக்கியக் கதாபாத்திரம் என்று சொல்லு மளவுக்கு உணவுக்கான இடம் அழுத்த மாகவும் ரசனைக்குரியதாகவும் இருக் கிறது. பெண்களுக்குத் திருமணம் தாமதமானால், சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை சினேகாவின் அழுகை உணர்த்துகிறது.

மலையாளத்தின் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹிட்டானதற்கு முக்கியக் காரணம் அந்தப் படத்தின் திரைக்கதையி லும் நடிப்பிலும் இருந்த யதார்த்தம். அதைத் திரையில் கொண்டுவருவதில் பிரகாஷ் ராஜுக்கு வெற்றி கிடைத்திருப்ப தாகச் சொல்ல முடியவில்லை.

படத்தோடு ஒன்றிவிடச் செய்கிறது ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. சமையல் செய்யும் போதும், முதல் பாடலிலும் ஒளிப்பதிவு அற்புதம். நம் வீட்டு சமயலறையில் நம்மை அமரவைத்து விதவிதமாகப் பரிமாறுகிறது இவரது ஒளிப்பதிவு.

பெண் பார்க்கப் போகும் இடத்தில் வடையை ருசிப்பது, கேக் செய்து ருசித்து சாப்பிடுவது என விளம்பரங்களில்கூட யாரும் இவ்வளவு நடித்திருக்க மாட் டார்கள். அந்தளவிற்குச் சாப்பிடும் முகபாவனைகள், சாப்பாட்டை ருசிக் கும் தன்மை எனப் பாத்திரத்திற்குப் பொருந்தியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

கண்ணாடி அணிந்த சினேகா, கௌரி பாத்திரத்தில் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வசனங்கள் பல இடங்களில் பளிச்சிட்டாலும், சில இடங் களில் சகிக்க முடியவில்லை. குறிப் பாக காளிதாசன்-கௌரியின் முதல் தொலைபேசி உரையாடலில் வரும் வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்த உரை யாடலே செயற்கையாக இருந்தாலும், “வா, உன்னை மாங்காய் தின்ன வைக்கி றேன்” என்ற வசனம் எந்த வகையி லும் படத்திற்கு வலுசேர்க்கவில்லை. வரவர, பெண்களை இழிவு செய்யும் வசனங்களைப் படங்களில் இருந்து நீக்குவதற்காகவே தனி தணிக்கைக் குழு அமைக்க வேண்டும் போலிருக்கிறது.

இளையராஜாவின் பின்னணி இசை மட்டுமே படத்தின் ஆறுதலான விஷயங்களில் ஒன்று. கைலாஷ் கெர்ரின் குரலில் ‘இந்த பொறப்புதான்’ பாடல் முணு முணுக்க வைக்கிறது. ‘ஈரமாய் ஈர மாய்’, ‘தெரிந்தோ தெரியாமலோ’ பாடல்களும் காதுகளுக்கு இதமளிக்கின்றன. நடிக்கத் தெரிந்த நடிகர்கள் பலரை அஞ்சறைப் பெட்டியில் வைத்துக் கொண்டு, அவர்களைச் சமையலில் சரியான அளவில் சேர்ப்பதற்கு மறந்திருக்கிறார் இயக்குநர் பிரகாஷ்ராஜ்