இது நம்ம ஆளு படத்திற்காக வாய்ஸ் கொடுக்கும் நயன்தாரா!

வல்லவன்’ படத்திற்கு பிறகு சிம்பு-நயன்தாரா மீண்டும் இணைந்திருக்கும் ‘ரொமண்டிக் காமெடி’ படம் ‘இது நம்ம ஆளு’.இப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில், ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ சார்பாக சிம்பு தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். இப்படத்தில் காமெடிக்கு சூரி நடிக்கிறார். சிம்புவுடன், சூரி இணைவது இதுவே முதல்முறை.


இது நம்ம ஆளு படத்தில் நயன்தாரா முதன் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசவிருக்கிறார். முதலில் டப்பிங் பேசுவது குறித்து நயன்தாராவிடம் இயக்குனர் சொன்னபோது இதுவரை எந்தப் படங்களிலும் டப்பிங் பேசியதில்லை என தயக்கம் காட்டினாராம்.

ஆனால் இயக்குனரோ நயன்தாராவை விடவில்லையாம். நீங்கள் டப்பிங் பேசினால் அது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இயக்குனர் பிடிவாதமாக இருக்க பிறகு வேறு வழியில்லாமல் படத்தில் டப்பிங் பேச ஒப்புக் கொண்டாராம். இதற்காக நயன்தாரா ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி எடுத்து வருகிறாம்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த நயன்தாரா தனது கதாபாத்திரத்துக்கு இதுவரை சொந்த குரலில் டப்பிங் பேசியது கிடையாது. விரைவில் அவரது குரலை ரசிகர்கள் கேட்கலாம். இப்படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் படக்குழுவினர். இதேபோல கௌதம் மேனன் படத்திலும் அனுஷ்காக முதன் முறையாக சொந்தக் குரலில் பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.