குத்துச் சண்டை கற்கும் நமீதா

நமீதா சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வர தயாராகிறார். சிலர் ஆக்ஷன் கதைகளுடன் அவரை அனுகியுள்ளனர். எனவே சண்டை படத்தில் அவர் நடிப்பார் என தெரிகிறது. இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வலுவாக்கி வருகிறார். 


‘ஜிம்’மில் தான் உடற்பயிற்சிகள் செய்து கொண்டு இருக்கிறார். தற்போது மைதானத்துக்கு வந்து குத்துச்சண்டை பயிற்சி எடுக்கிறார். பயிற்சியாளர் வைத்து குத்து சண்டையை அவர் கற்கிறார். தினமும் அதிகாலையில் சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி மைதானத்துக்கு வந்து விடுகிறார். அங்கு பல மணி நேரம் குத்துச் சண்டை கற்கிறார். 

கயிறு கட்டி தொங்கும் பயிற்சியிலும் ஈடுபடுகிறார். பயிற்சி பெற்ற குத்துச் சண்டை வீரர் ஒருவருடன் மோதும் அளவுக்கு நமீதா இதை கற்று விட்டாராம்.