திருடரின் கையில் சிக்கும் உங்கள் கைபேசியின் தகவல்

ஒரு ஸ்மாட்போன் திருடரின் கையில் சிக்கும் சமயத்தில் அதனை முற்றுமுழுதாக செயலிழக்கச் செய்யும் ‘Kill Switch;’ என்ற ஆளி உருவாக்கப்பட்டு வருகிறது.குறித்த தொலைபேசியிலுள்ள மென்பொருளானது, அதனை உரிமையாளர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை கண்காணித்து அவரது வழமையான செயற்பாடுகளை பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.

அதன் பதிவேட்டில் எத்தகைய அப்ளிகேஷன்கள் எப்போது பயன்படுத்தப்படுகின்றன, தொலைபேசி எவ்வாறு பிடிக்கப்படுகிறது போன்ற விபரங்களும் சேர்க்கப்படும்.

எவரேனும் ஒருவர் இவற்றுக்கு மாறுபட்ட விதத்தில் தொலைபேசியை கையாளும் போது அது தானாகவே செயலிழந்து விடும் விதத்தில் ‘Kill Switch;’ ஆளி வடிவமைக்கப்படுகிறது.