உங்கள் ஆயுளை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க வேண்டுமா?

மிகப் பெரிய ஆய்வு ஒன்றின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது ஆயுளை 10 வருடங்களால் எப்படி அதிகரிப்பது என்ற தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.சூரிச் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது நாள்தோறும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் என்பவற்றுடன் வழமைக்கு மாறான வாழ்க்கை முறையை கொணடு சிறிதளவில் பழங்களை உள்ளெடுப்பவர்கள் தமது ஆயுளில் 10 ஆண்டுகளை அதிகரிப்பதற்கான சாத்தியம் 35 சதவீதம் காணப்படுவதாகவும்,

அதே வயதை உடைய ஒருவர் எந்தவிதமான புகைப்பழக்கங்களோ, குடிப்பழக்கங்களோ இல்லாது பழங்களை போதியளவில் உள்ளெடுத்து நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் ஒருவர் தனது ஆயுளை 10 ஆண்டுகளால் அதிகரிப்பதற்கான சாத்தியம் 67 சதவீதம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு ஆயுளை அதிகரிப்பதற்கான கல்குலேட்டர் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

அவற்றில் தரப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் உங்களிடம் இருக்கின்றதா, இல்லையா என்று பதிலளிப்பதன் ஊடாக ஆயுள் வயதை கணித்துக்கொள்ள முடியும்.

இது பெண்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.