ஐந்தாவது முறையாக கைகோர்க்கும் சூர்யா-ஹரி கூட்டணி!

ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே சூர்யா, “ஆறு”, “வேல்”,”சிங்கம்”, “சிங்கம்2″ ஆகிய நான்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்த நான்கு படங்களில் ஆறு படத்தை தவிர மற்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது இந்த வெற்றிக்கூட்டணி ஐந்தாவது முறையாக மீண்டும் இணைய உள்ளது.

சமீபத்தில் நடந்த 'அஞ்சான்' டீஸருக்கான சக்சஸ் பார்ட்டியில் பேசிய சூரயா "அடுத்தாண்டில் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். அப்படம் 'சிங்கம் 3' ஆக இருக்குமா என்று இப்போது கூற முடியாது" என்று கூறினார். இதன்மூலம் ஹரியுடன் மீண்டும் இணைய இருப்பதை உறுதி செய்தார் சூர்யா.

ஹரி தற்போது விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன் வைத்து பூஜை திரைப்படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார். அதேபோல், சூர்யாவும் அஞ்சான் திரைப்படத்தை முடித்த வேகத்தில் வெங்கட்பிரபு இயக்கும் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். எனவே ஹரி-சூர்யா இணையும் அடுத்த படம் வரும் 2015 இறுதியில் அல்லது 2016ஆம் ஆண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.