மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

நாடாளுமன்ற தேர்தலில், வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடி போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ. அஜய்ராய் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜய்ராய் தாக்கல் செய்த மனுவில் , மோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயரை நிரப்ப வேண்டிய கட்டத்தில் நிரப்பால் மறைத்துள்ளார். மேலும் தேர்தலில் 70 லட்சம் வரை மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே இநத் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மறுவை விசாரித்த நீதிபதி வி.கே. சுக்லா, மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.