குறைந்த கட்டணத்தில் BSNL 3G சேவை

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிடக் குறைவான கட்டணத்தில் மொபைல் 3-ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல்.(சென்னை வட்டம்) துணைப் பொது மேலாளர் என்.மோகன் வெளியிட்ட செய்தி: மொபைல்போன் 3-ஜி சேவையில் ஒரு ஜி.பி திட்டங்களுக்கான கட்டணம், போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.140-ஆகவும், பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.155-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களை விடக் குறைவாகும். இதே போல வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை வழங்கி வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.