Facebook அறிமுகம் செய்யவுள்ள புத்தம் புதிய வசதி

சமூகவலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம், தனது பயனர்களுக்காக விரைவில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.அதாவது பேஸ்புக் தளத்தில் இடம்பெறும் விளம்பரங்கள் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ‘Buy Button’ இனை அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது சோதனையில் இருக்கும் இவ்வசதியின் ஊடாக பேஸ்புக் தளத்திலிருந்து வெளியேறாமலே பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொள்வனவின்போது முழுமையான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.