மனநலம் பாதித்த பெண்ணை 2 ஆண்டுகளாக கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!

பெங்களூர் கே.ஜி.ஹள்ளி சாம்புரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் மனீஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது உறவினர் முதாசீர் (வயது 20). இவருக்கு 14 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதாசீரும், அவரது தம்பியும் சேர்ந்து மனீஷாவை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பழித்ததாக தெரிகிறது. மனீஷா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட முதாசீரும், அவரது தம்பியும் கடந்த 2 ஆண்டுகளாக மனீஷாவை தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனீஷாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.அதைத்தொடர்ந்து இந்த கற்பழிப்பு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மனீஷாவின் பெற்றோர் சம்பவம் பற்றி டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதாசீர், அவரது 14 வயது தம்பியையும் கைது செய்துள்ளனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுகுறித்து கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சதீஷ்குமார் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 2 ஆண்டுகளாக தொடர்ந்து கற்பழித்து வந்ததாக, உறவினர்களாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் ‘பேக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அந்த சட்டத்தின் நோக்கம், முதல் முறையாக கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபடுவோரின் பெயர் ரவுடி பட்டியலில் இடம்பெறுவது ஆகும். சம்பவம் பற்றி இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.