போக்குவரத்து நெரிசல் அறிய புதிய இணையதளம் வெளியீடு

சென்னையில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த இடங்களில் டிராபிக் ஜாம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள சென்னை ஐஐடி சார்பில் www.rtis.iitm.ac.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த இணையதளத்தின் வெள்ளோட்டம் 16 கி.மீட்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அதன்படி ஓஎம்ஆர், ராஜீவ்காந்தி ஐடி விரைவுச் சாலை, தரமணி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி புறவழிச்சாலை, சர்தார் பட்டேல் சாலை மற்றும் தாலுகா அலுவலக சாலைகளின் வரைபடத்துடன் கூடிய போக்குவரத்து நெரிசலை பயணிகள் காண முடிவும். இணையதள வசதி உள்ள செல்போன் மூலம் போக்குவரத்து நெரிசலை காண முடியும்.

 இதனால் பயணிகள் செல்ல வேண்டிய இடம் மற்றும் பயண முறையை தேர்வு செய்ய முடியும். இந்த இணையதளம் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறையின் உதவியோடு செயல்படுத்தப்படுகிறது.