கன்னடப் படத்தில் திரிஷாவின் கவர்ச்சி

கதாநாயகிகள் பலரும் கவர்ச்சிக்கு மாறி வருகின்றனர். நீச்சல் உடையிலும் கலக்குகிறார்கள். அரைகுறை ஆடையில் குத்தாட்டமும் ஆடுகின்றனர். கவர்ச்சிக்குச் சம்மதிக்கும் கதாநாயகிகளுக்கே பட வாய்ப்புகள் குவிவதால் கவர்ச்சி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. கவர்ச்சியாக நடிப்ப தில் நடிகைகளுக்குள் போட்டியும் நிலவுகிறது. நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, சுருதி ஹாசன், சமந்தா என முன்னணி நடிகைகள் பலரும் கவர்ச்சிக்கு மாறிவிட்டனர்.


சமந்தா ‘அஞ்சான்’ படத்தில் நீச்சல் உடையில் நடித்துப் பரபரப்பு ஏற்படுத்தினார். திரிஷா மட்டும் கவர்ச்சியாக நடிக்காமல் இருந்தார். தற்போது அவரும் மாறிவிட்டார். புனித்ராஜ்குமார் ஜோடியாக நடிக்கும் கன்னடப் படத்தில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கிறார்.
நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளாராம். திரிஷாவின் கவர்ச்சிப் படங்கள் இணையத்தில் பரவி உள்ளன.