டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் தடாலடி

டு பீஸ் நீச்சல் உடையில் நடித்திருக்கும் சமந்தாவை ரசிகர்கள் திடீர் விமர்சனம் செய்துள்ளனர்.‘பாணா காத்தாடி, ‘நான் ஈ உள்ளிட்ட கோலிவுட் படங்களில் நடித்த சமந்தா சேலை கட்டிக்கொண்டும், சுடிதார் அணிந்துமே நடித்து வந்தார். அடக்க ஒடுக்கமான இவரது நடிப்பு ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா போன்ற கவர்ச்சி ஹீரோயின்கள் முன்னிலையில் மங்கியே இருந்தது.

 கமர்ஷியல் ரீதியாக கவர்ச்சி காட்டி நடித்தால்தான் திரையுலகில் நீடிக்க முடியும் என்று சமந்தாவுக்கு சிலர் அறிவுரை கூறினார்கள். அதை ஏற்று அவரும் கவர்ச்சி காட்டி நடிக்கத் தொடங்கினார். ஆனால் ஏற்கனவே ‘நேனோக்கடய்னே என்ற தெலுங்கு பட போஸ்டரில் மகேஷ் பாபுவுடன் டூ பீஸ் உடையில் கவர்ச்சியாக நடித்த மற்றொரு ஹீரோயின் போஸ்டர் வெளியானபோது அதற்கு இணைய தள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மகேஷ்பாபுவையும் கண்டித்திருந்தார் சமந்தா.

இதையடுத்து மகேஷ் பாபு ரசிகர்கள் சமந்தாவை விமர்சித்தனர். இந்த மோதல் மாதக்கணக்கில் நீடித்தது. தற்போது சூர்யாவுடன் சமந்தா நடித்திருக்கும் ‘அஞ்சான் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் டூ பீஸ் உடையில் சமந்தா நடித்துள்ளார். இதற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் இணைய தள பக்கத்தில் சரமாரியாக தாக்கி மெசேஜ் வெளியிட்டிருக்கின்றனர்.

 கடந்த மாதம் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் சமந்தாவும் மகேஷ் பாபுவும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததையடுத்து இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்பிரச்னை மீண்டும் முற்றி இருப்பதால் சமந்தா டென்ஷன் ஆனார்.