காதல் பாதையில் ‘அமரகாவியம்’

‘வீட்ல பாட்டு விழுது. சும்மா இல்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் இயக் குநரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா படு பவ்யமாக ரியாக்ட்சன் காட்டினார். என்னவாம்? சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவைச் சந்திக்க போன ஜீவா சங்கர், வீட்டில் சத்யாவைப் பார்த்திருக்கிறார். ‘ஏம்ப்பா நீயும் உங்க அண்ணன் மாதிரி நடிகனாகலோமே?’என்று புகையை போட்டுவிட்டு போக, அதற்கப்புறம் சினிமா ஆசை பற்றிக் கொண்டு திரிந்திருக்கிறார் சத்யா. ‘நல்லா படிக்கிற பையனை இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து கெடுத்துப்புட் டீங்களே’ என்கிறார்களாம் வீட்டில்!

ஆர்யாவும் ஜீவா சங்கரும் நெருங் கிய நண்பர்கள். ஆர்யாவின் முதல் படமான ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் உதவியாளர்தான் இந்த சங்கர். “ஆர்யாவை நடிக்க வைக்கலாமா வேண்டாமா?” ஜீவா நடத்திய ஆலோச னையின்போது, “நடிக்க வைக்கலாம்,’ என்று பச்சைக் கொடி காட்டியவர்தான் இந்த ஜீவா சங்கர். அன்றிலிருந்து தொடர்கிறதாம் இந்த நட்பு.