மனைவி நடத்தையில் சந்தேகம் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

திருவாலங்காடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திமடைந்த கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு திருத்தணி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருவலாங்காடு அடுத்த சின்னமபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் உமாசங்கர்(28). இவரது மனைவி ஐஸ்வர்யா(23) இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகியுள்ளன. உமாசங்கர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு கணவன் மனைவிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திமடைந்த உமாசங்கர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் புதன்கிழமை பிற்பகல் திருத்தணி நீதிமன்றத்தில் வழக்குரைஞருடன் சரணடைந்து கொலை செய்ததற்கான காரணத்தை நீதிமன்றதில் கூறினார்.

தகவலறிந்த திருவாலங்காடு போலீசார் ஐஸ்வர்யாவின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உமாசங்கரிடம் கொலை செய்ததற்கான காரணத்தை போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்