சூழ்ச்சி வலையில் சிதம்பரம்?

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சூழ்ச்சி வலையில் சிக்கி இருக்கிறார் என்றும் அவரின் பெயரைக் கெடுத்து, அவர் மேலவை உறுப்பினராவதைத் தடுக்க சதி வலைகள் பின்னப்பட்டு இருப்பதாகவும் அவர் தரப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பெரும்பெரும் அரசியல் புள்ளிகளை வளைத் துப் போட்டு அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும் பலைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி கேரளப் போலிஸ் சில பெண்களை அண்மையில் கைது செய்தது.


கேரளாவைச் சேர்ந்த ருக்சானா, பிந்தியா ஆகிய அந்தப் பெண்கள் பிரபலங்கள், வசதியான பேர்வழிகள், அர சியல் தலைவர்களை நெருங்கி அவர்களுடன் பாலியல் உற வில் ஈடுபடுவதும் அதைப் படம்பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் பெரும்புள்ளி களை மிரட்டி பணம் பறிப்பது மான மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கேரளக் காங்கிரஸ் முன் னாள் எம்எல்ஏ சரத் சந்திர பிரசாத் பெயரில் முன் பதிவு செய்யப்பட்ட அறையில் தங்கி இருந்த ஜெயச்சந்திரன் என் பவர் கைதானதை அடுத்து ருக்சானாவும் பிந்தியாவும் பிடி பட்டனர்.

போலிசார் தங்களை துன் புறுத்தியதாகவும் சில கேரளா காங்கிரஸ் தலைவர்கள், ப. சிதம்பரம் உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிலரிட மும் பாலியல் பட வட்டுகளைக் காட்டி பணம் பறித்ததாக தங் களைக் கட்டாயப்படுத்தி போலிசார் சொல்ல வைத்த தாகவும் அவ்விருவரும் வாக்கு மூலம் கொடுத்தனர்.