மன்னிப்புக் கேட்கவே தகுதியற்ற வகையில் மன்னிப்பைக் கோருகிறோம்: இலங்கை

நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் 'லெட்டர்கள்’ எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை - என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் இலங்கை ராணுவ இணையதளத்தில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப் பட்டிருந்தது.

இந்தக் கட்டுரைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதை அடுத்து, இலங்கை ராணுவ இணையதளத்தில் இது குறித்து தாங்கள் மன்னிப்புக் கேட்கவும் தகுதியற்ற வகையில் இந்த மன்னிப்பைக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை சரியான வகையில் பார்வையிடப் படாமல் வெளியாகிவிட்டதாகவும், இது இலங்கை ராணுவ மற்றும் நகர்ப்புற வளர்சி அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான கருத்தை வெளிப்படுத்தவில்லை என்றும், அந்தக் கட்டுரை இணையத்தில் இருந்து நீக்கப் பட்டு விட்டதாகவும் இலங்கை ராணுவ இணைய தளத்தில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.