மெரிட் மாணவர்களின் முதுநிலைப் படிப்பிற்கான உதவித்தொகை

இளநிலைப் படிப்பில், பல்கலை அளவில் ரேங்க் பெற்றவர்கள், முதுநிலை படிப்பை மேற்கொள்வதற்கு வசதியாக, அவர்களுக்கு மெரிட் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த உதவித்தொகை, ஒருவர் தனது முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்வதற்கு வசதியாக, 2 ஆண்டுகள் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், ரேங்க் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

இந்த உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், கீழ்கண்ட ஆவணங்களையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அவை,

புராவிஷன் ரேங்க் சான்றிதழ்
பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல்
சேர்க்கை ரிப்போர்ட்

இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், தங்கள் தொடர்புடைய ஸ்பெஷலைசேஷனில், முதுநிலைப் படிப்பை நாட்டின் ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - செப்டம்பர் 15.

விரிவான விபரங்களை அறிய http://www.ugc.ac.in/urh/.