தரம் பார்க்கும் சிவகார்த்திகேயன்

தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம், “ரொம்ப செலவாகிறதே என்று நினைக்கவேண்டாம். நாயகனும் நாயகியும் தொடர்பான காட்சிகள் நயமாகவும் தரமாகவும் இருக்க வேண்டும் என்றும் அதற்கு செலவுசெய்வது வீண்போகாது என்கிறாராம் சிவகார்த்திகேயன்.

நல்ல நாயகி, முதல் தர நகைச்சுவை, உயர்தர தொழில்நுட்பத்தைத் அறிந்துள்ள கலைஞர்கள் இப்படி படத்தை தரமானதாக்குபவர்கள் யாராக இருந்தாலும் நம்முடன் இணைத்துக்கொள்ளுங்கள். இதுதான் சிவாவின் தாரக மந்திரம்.

லிங்குசாமி தயாரிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் அந்த தயாரிப்பாளர்.