நடு ரோட்டில் தம்பதிகள் அரைநிர்வாண புகைப்படம்

ஈப்போவில் நகரத்தின் மையப்பகுதியில் அரை நிர்வாணக் கோலத்தில் திருமணப் புகைப்படம் எடுத்த தம்பதிக்கு முறையே அபராதம் விதிக்கப்பட்டது.அபராதத் தொகையைக் செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஹஸ்லிண்டா இன்று, புதன்கிழமை பகுதி நேர புகைப்படக் கலைஞர்களான 27 வயது லாவ் கா வாய் மற்றும் 21 வயது ஹாவ் ஜோ யீ ஆகிய இருவரும், கடந்த ஆகஸ்டு 25-ஆம் தேதி ஜாலான் சுல்தான் யூசோப்பில் அரைநிர்வாணமாக நடந்து சென்று சாலை நெரிசலுக்கு வித்திட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இந்த அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தார்.