என்னுடைய வீக்னஸ் என்ன தெரியுமா... ஸ்ருதிஹாசன் மனம் திறக்கிறார்...!

நடிகர்களில் தான் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனாலும், அவர்களில் ஒரு சிலர்தான் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தொட முயற்சி செய்து வருகிறார்கள். ஒரு சிலர், இன்னும் ஓடவே ஆரம்பிக்கவில்லை. அதே சமயம் வாரிசு நடிகைகளில் முத்திரை பதிக்கும் ஒரே நடிகையாக இருப்பவர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மட்டுமே.

 மற்ற வாரிசு நடிகைகளாக அறிமுகமான சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு 'போடா போடி' படம் ஏமாற்றத்தைத் தந்தாலும் பாலா இயக்கும் 'தாரை தப்பட்டை' படம் தன்னை முன்னணிக்கு கொண்டு வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமான 'பட்டத்து யானை' யாருக்குமே பட்டத்தைக் கொடுக்காமல் போய்விட்டது.


தமிழிலும், தெலுங்கிலும் பலத்த போட்டியைச் சந்தித்து வரும் ஸ்ருதிஹாசன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிகவும் நிதானமாக அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். தமிழில் தற்போது விஷாலுடன் 'பூஜை' படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், அடுத்து விஜய் ஜோடியாக சிம்பு தேவன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


ஸ்ருதிஹாசன் அவருடைய வீக்னஸாக நினைப்பது என்ன தெரியுமா. நல்ல சுவையான உணவு கிடைத்தால் அதை ஒரு கை பார்க்காமல் விட மாட்டாராம். எந்த வஞ்சனையும் இல்லாமல் அப்படி ருசித்துச் சாப்பிடுவாராம். அதே சமயம், அதற்கு ஈடாக ஜிம்முக்குச் சென்று அவருடைய எடையையும் கட்டுக்கோப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வாராம். மற்ற நடிகைகளைப் போல் சாப்பிடுவதில் கட்டுக்கோப்பாக இருக்க மாட்டாராம். ஸ்ருதிஹாசனுக்கு இது ஓ.கே. ஆனால், அவருடைய போட்டியாளர்கள் அவரை விட குண்டாகத்தானே இருக்கிறார்கள். அவர்களும், அப்படி சாப்பிட்டால் என்ன ஆவது...?