மனைவியை அடித்துக் கொன்ற கைதியை நெற்றியில் முத்தமிட்டு பாராட்டிய போலிஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஷியாம், வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக, தனது மனைவியை அடித்துக் கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலிஸ் அதிகாரி நாயக், விசாரணைக்குப் பின் ஷியாமை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, நல்ல பையன் என்று ஷியாமை தட்டிக் கொடுத்து பாராட்டியுள்ளார்.

இதனை அங்கிருந்த சிலர் படமெடுத்து விட்டனர். இந்த தகவல் காவல்துறை ஐஜி ஆசுதோஷ் பாண்டேவுக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில், இவ்வழக்கு விசாரணையில் இருந்து நாயக்கை நீக்கியும், அவரை இடமாற்றம் செய்தும் ஐ ஜி உத்தரவு பிறப்பித்தார்