நடிகை ஹர்லேயின் முத்தத்துக்கு ரூ.49 லட்சம் செலவிட்ட இளைஞர்

பிரபல நடிகையும், மாடலுமான எலிசபெத் ஹர்லேயை முத்தமிட ரூ.49 லட்சம் செலவிட்டார் கோடீஸ்வர இளைஞர். எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி லண்டனின் பிரபலமான ஓட்டலில் நடந்தது. இதில் பல பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரபல பணக்காரர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் உச்சமாக, அதில் கலந்து கொண்ட நடிகை எலிசபெத் ஹர்லே, தன்னை முத்தமிடலாம் என்று அறிவித்து அதற்கான ஏலத்தையும் அறிவித்தார். இதில் கனடாவில் வங்கியை நடத்திவரும் பிரபல கோடீஸ்வரரான இந்திய வம்சாவளி ஸ்டான் பாரதியின் மகனான 27 வயதாகும் ஜூலியன் பாரதி ரூ.49 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். 

மூன்று குழந்தைகளுக்கு தந்தையான ஜூலியன், 49 வயதாகும் நடிகை ஹர்லேயின் உதட்டில் முத்தமிட்டு ஏலத்தை முடித்துக் கொண்டார். மிகப் பெரிய சாதனை ஏலம் எடுத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட ஜூலியன், இந்த முத்தம் குறித்து தனது காதல் மனைவி எந்த பிரச்னையும் செய்யவில்லை. மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டார் என்று கூறினார்.