ஐடி கேர்ள் அனுஷ்கா, ஹோம்லி த்ரிஷா! - தல 55 கேரக்டர் ரகசியங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் , அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் 'தல 55' படத்தின் புதிய படங்கள் நேற்று வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் த்ரிஷா , அஜித் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளனவா என்பதற்கு கௌதம் மேனன் பதில் சொல்லவில்லை.

'' இதுவரை பார்க்காத கேரக்டரில் த்ரிஷாவைப் பார்க்கலாம். இந்தப் படத்தில் த்ரிஷா இன்னும் புதிதாகத் தெரிவார். அஜித்திற்கும், த்ரிஷாவிற்குமான காட்சிகள் ரசிக்கும் வகையில் அருமையாக இருக்கும். த்ரிஷா தான் கதைக்கரு'' என்கிறார் கௌதம்.



ஐடி வேலையில் இருக்கும் மாடர்ன் கேர்ள் கேரக்டரில் நடிக்கிறாராம் அனுஷ்கா.

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வட இந்தியாவின் எல்லைகளில், ராணுவ தளங்களில் உள்ள லொக்கேஷன்களின் சிறப்பு அனுமதி பெற படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சென்றிருக்கிறாராம்.