இந்தியாவின் விலை குறைந்த ஸ்மாட்போன் ரூ.1,999 விலையில்

ஜிவி மொபைல் நிறுவனம் தனது முதல் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனான ஜிவி ஜேஎஸ்பி 20 மாடலை ரூ.1,999 க்கு இந்தியாவில் வெளியிட்டது. ஜேஎஸ்பி 20 இந்தியாவின் விலை குறைந்த ஸ்மார்ட் போன் என்பதோடு பீச்சர் போன் வாடிக்கையாளர்களை ஸ்மார்ட் போன் பக்கம் இழுக்கவே குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

2ஜி ஸ்மார்ட் போன் 3.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் டிஸ்ப்ளே மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் ஆன்டிராய்டு 2.3.5 ஜின்ஜர்ப்ரெட் ஓஎஸ் மூலம் இயங்குவதோடு டூயல் சிம், வைபை மற்றும் ப்ளூடூத் வசதியும் இதில் உள்ளது.

மெமரியை பொருத்த வரை ஜிவி ஜேஎஸ்பி 20 128 எம்பி ராம் மற்றும் 256 எம்பி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியோடு ப்ளாஷ் வசதி கொண்ட 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 1350 எம்ஏஎஹ் பேட்டரியும் இதில் உள்ளது.

தற்சமயம் இந்த ஸ்மார்ட் போன் அமேசான் இணையதளத்திலும் கடைகளில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்பதோடு செப்டம்பர் 24 ஆம் தேதி வரை முன் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக ப்ளிப் கவர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.