கணவனை கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு நெஞ்சுவலியில் செத்ததாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

சென்னை பள்ளிக்கரணையில் கணவரைக் கொலை செய்துவிட்டு நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி, கொலைக்கு உதவிய கள்ளக் காதலர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பள்ளிக்கரணை நன்மங்கலம் அருகே உள்ள ஜி.பி.சாமிநகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் கட்டடத் தொழிலாளி. இந்நிலையில் சத்யநாராயணன் கடந்த 22-ம் தேதி நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக அவரது மனைவி அம்சரேகா தெரிவித்தார்.

ஆனால், சத்யநாராயணனின் சாவில் சந்தேகமடைந்த அவரது சகோதரி அஞ்சலை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், அம்சரேகா, தனது கள்ளக்காதலர் கோடம்பாக்கம் காந்திநகர் 10-ஆவது தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் (38) சேர்ந்து சத்தியநாராயணனின் கழுத்தை நைலான் கயிறால்இறுக்கிக் கொலை செய்திருப்பது தெரியவந்ததால் ரேகாவையும், ஆறுமுகத்தையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.