விஜய்க்கு வலை விரிக்கிறார் திரிஷா

ஆஸ்தான ஹீரோ விஜய்க்கு வலை விரிக்கிறார் திரிஷா.திரிஷாவுக்கு டும் டும் என்று கிசுகிசு தொடங்கி வருட கணக்கு ஆகிவிட்டது. அவரோ வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று சிம்பிளாக பதில் சொல்லிவிட்டு நடிப்பில் கவனம் செலுத்துகிறார். எங்கு சென்றாலும் அவர் கூடவே நடிகர் ராணா ஒட்டிக்கொண்டு செல்கிறார். ‘ராணாவைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா? என்றால், ‘அவர் எனது பாய்பிரண்ட் என்று பதில் சொல்லி கப்சிப் ஆகிவிடுகிறார். இதுவொருபக்கம் அரசல்புரசலாக பேசப்பட்டு வந்தாலும் பெரிய படங்களை கைப்பற்றுவதில் கில்லாடி என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் திரிஷா.

ஜி, கிரீடம், மங்காத்தா என 3 படங்களில் அஜீத்துக்கு ஜோடி போட்ட திரிஷா மீண்டும் கவுதம் மேனன் இயக்க அஜீத் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடி போட்டிருக்கிறார். அதேபோல் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடி சேர்ந்தவர் மறுபடியும் அவர் படத்தில் நடிப்பதற்காக வலை விரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘கத்தி‘ படத்தின் ஆடியோவை கேட்டுவிட்டு அதன் இசை அமைப்பாளர் அனிரூத்துக்கு வாழ்த்துகூறி இணைய தள பக்கத்தில் செய்தி போட்டிருக்கிறார் திரிஷா. அஜீத்துக்கு ஜோடி சேர்ந்திருக்கும் திரிஷா இந்த வாழ்த்து மூலம் தனது ஆஸ்தான ஹீரோ விஜய்யுடன் மீண்டும் நடிக்க வீசியிருக்கும் வலைதான் இது என்கிறார்கள்.