போலீஸாக நடிக்கும் நயன்தாரா!

’ரோமியோ ஜூலியட்’ மற்றும் அஞ்சலியுடன் இன்னும் பெயரிடப்படாத புதிய படம், மற்றும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 

’தனி ஒருவன்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க இருப்பது நாம் அறிந்ததே.

'' எனது முந்தைய படங்களை காட்டிலும் தனித்தன்மையுடன் இந்த ‘தனி ஒருவன்’ இருக்கும். மேலும் இது தன் மனம் கவர்ந்த கதை'' என ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் ராஜா.

தற்போது புதிய செய்தியாக இந்த படத்தில் முதல் முறையாக நயன்தாரா போலீஸாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.