சர்ச்சை வீடியோவில் இருப்பது நான் இல்லை: சிம்பு

சமீபத்தில் வெளியான சர்ச்சை வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் நடிகர் சிம்பு பதிலளித்துள்ளார்.

ஓர் ஓட்டல் அறைக்கு வெளியே நின்று, ஒரு இளைஞரும் யுவதியும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இருப்பது கன்னட நடிகை ஹர்ஷிகாவும், சிம்புவும் தான் என்று இணையத்தில் பகிரப்பட்டது. அண்மையில் மலேசியாவில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் இருவரும் சந்தித்ததாகவும், அப்போதைய பரிச்சியத்தின் விளைவே ஹோட்டல் லாபியில் இருவரும் முத்தமிடும் வரை வந்துள்ளது என்றும் தகவல்கள் பரவின. இது குறித்து, இதுவரை சிம்புவோ, ஹர்ஷிகாவோ ஊடகங்களில் பேசவில்லை.

தற்போது, சிம்புவிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான ஒரு வீடியோவிற்காக நான் ஏன் பதற வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.