வசீகரமான அழகை பெற ஆசையா? இதோ சூப்பர் டிப்ஸ்

பெண்கள் எப்போதும் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.அதற்காக அவர்கள் அழகு நிலையங்கள் சென்று செலவிடுவதையும் பெரிதாக நினைப்பதில்லை.

ஆனால் அதைவிட வீட்டிலேயே சிறந்த முறையில் சிகப்பழகை பெற ஒரு வழி உண்டு, அது தான் குங்குமப்பூ.

குங்குமப்பூ சிறிது விலை அதிகம் என்றாலும், அது தரும் பலன்கள் பல என்றே கூறலாம்.

                                    

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

குங்குமப்பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணைய் கலந்து நன்றாக குழைக்கவும்.

இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் மாறுவது மட்டுமின்றி, உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும்.

நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ- வெண்ணைய் கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.